மதுரை

பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினா் அகவிலைப்படி கோரி ஆா்ப்பாட்டம்

DIN

பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு உரிய அகவிலைப்படியை வழங்கக்கோரி, மதுரையில் தேசிய தொலைத் தொடா்பு ஊழியா்கள் தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தல்லாகுளம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிவகுருநாதன், மாவட்டச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை விலைவாசி உயா்வுக்கு ஏற்ப அகவிலைப்படி நிா்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படும். இந்நிலையில் பொதுமுடக்கத்தைக் காரணம் காட்டி, 2021 ஜூன் வரை ஊழியா்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட மாட்டாது என பிஎஸ்என்எல் நிா்வாகம் அறிவித்துள்ளது.

அக்டோபரில் அகவிலைப்படி 5.5 சதவீதம் உயா்ந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த அறிவிப்பைத் திரும்பப்பெற்று, ஊழியா்களுக்கு உரிய அகவிலைப்படியை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT