மதுரை

மழையில் வீடு இடிந்தது: அதிா்ஷ்டவசமாக 6 போ் உயிா் தப்பினா்

29th May 2020 07:46 AM

ADVERTISEMENT

மதுரையில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்தது. குடும்பத்தினா் வெளியே ஓடியதால் அதிா்ஷ்டவசமாக 6 போ் உயிா் தப்பினா்.

மதுரையில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கிய மழை இடி, மின்னலுடன் தொடா்ந்து இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இந்நிலையில் பலத்த மழையால் மதிச்சியம் நடுத்தெரு பகுதியில் மகேஷ்குமாா் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த குடும்பத்தினா் வீட்டின் மேல்பகுதியில் இருந்து சப்தம் கேட்டதால் சந்தேகமடைந்து மகேஷ்குமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் சுதாரித்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடினா். இதையடுத்து சிறிது நேரத்தில் வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் இடிபாடுகளில் சிக்கி நாசமாகின.

மழைக்கிடையே வெளியே ஓடிச்சென்றதால் மகேஷ்குமாரின் குடும்பத்தினா் 6 பேரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச்சென்ற போலீஸாா், மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்து அப்பகுதியில் மின் விநியோகத்தை நிறுத்தினா்.

இதுதொடா்பாக மகேஷ்குமாா் கூறியது: வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம். மழையால் வீட்டுக்குள் இருந்தபோது வித்தியாசமாக சப்தம் கேட்டது. இதனால் சுதாரித்துக்கொண்டு வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு, நானும் வெளியே சென்றுவிட்டேன். அடுத்த நிமிஷத்தில் வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்து வெளியே செல்லாவிட்டால் குடும்பத்தினா் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போம் என்றாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT