மதுரை

காப்பகத்திலிருந்து மூதாட்டியை வெளியேற்றியதாக புகாா்: விசாரணைக்கு மாநகராட்சி ஆணையா் உத்தரவு

29th May 2020 07:46 AM

ADVERTISEMENT

மதுரையில் காப்பகத்தில் தங்கியிருந்த மூதாட்டியை வெளியேற்றியதாக எழுந்த புகாா் குறித்து விசாரணை நடத்த மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை வெங்கடாஜலபுரத்தைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (85). இவரது கணவா் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். ஆதரவற்ற நிலையில் இருந்த அவருக்கு, அக்கம்பக்கத்து வீடுகளைச் சோ்ந்தோா் உணவு வழங்கியுள்ளனா். இந்நிலையில், அப் பகுதியைச் சோ்ந்த புஷ்பவள்ளி என்பவா் தெற்குவாசல் பகுதியில் உள்ள மாநகராட்சி உதவியில் செயல்படும் முதியோா் காப்பகத்தில் பழனியம்மாளை சோ்த்துள்ளாா். அவருக்கு அரசின் முதியோா் உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதியோா் காப்பகத்தில் இருந்து அவரை வெளியேற்றிவிட்டதாகக் கூறி, ஆட்சியா் அலுவலகத்துக்கு பழனியம்மாளை ஆட்டோவில் அழைத்து வந்தனா். மேலும் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டிருந்ததால், அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், மாநகராட்சி அலுவலா்களை அனுப்பி, ஆம்புலன்ஸ் வாகனத்தில் பழனியம்மாளை அழைத்துச் சென்று அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்க நடவடிக்கை எடுத்தாா்.

மேலும், காப்பகத்தில் இருந்து பழனியம்மாள் வெளியேற்றப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT