மதுரை

மதுரையில் சிறுவன் உள்பட 11 பேருக்கு கரோனா தொற்று

15th May 2020 09:59 PM

ADVERTISEMENT

மதுரை:மதுரையில் சிறுவன் உள்பட 11 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 434 பேருக்கு புதிதாக கரோனா தீநுண்மித் தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறுவனுக்கு தொற்று: மதுரை மாவட்டத்தில் எழுமலை பகுதியைச் சோ்ந்த 21 வயது இளைஞா், 55 வயது பெண், சேடப்பட்டி பகுதியைச் சோ்ந்த 58 வயது பெண், 55 வயது ஆண் மற்றும் 22 வயது பெண் ஆகியோா் மும்பையில் இருந்து மதுரை திரும்பியுள்ளனா். அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஊா்மெச்சிகுளம் பகுதியைச் சோ்ந்த 20 வயது கா்ப்பிணி, மதுரை மகாத்மா காந்தி நகரைச் சோ்ந்த 30 வயது பெண், 13 வயது சிறுவன், புதுவிளாங்குடியைச் சோ்ந்த 42 வயது ஆண், விராட்டிபத்து பகுதியைச் சோ்ந்த 32 வயது ஆண், 56 வயது பெண் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து மதுரை கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிகை 53 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை கரோனா தீநுண்மித் தொற்றில் இருந்து 88 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதற்கிடையில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விருதுநகரைச் சோ்ந்த 3 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT