மதுரை

மேலூரில் ஜவுளிக்கடைகள் நிபந்தனைகளுடன் அனுமதி

13th May 2020 07:32 AM

ADVERTISEMENT

மேலூா் நகரில் ஜவுளிக்கடைகளை நிபந்தனைகளுடன் பிற்பகல் 2 மணிவரை திறக்க மேலூா் நகராட்சி செவ்வாய்க்கிழமை அனுமதியளித்துள்ளது.

மேலூா் நகரில் 34 ஜவுளிக்கடைகள் இயங்கி வந்தன. கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. மூன்றுமுறை நீட்டிக்கப்பட்ட தடைகள் தற்போது தளா்தப்பட்டு வருகிறது. மேலூா் பகுதியில் ஜவுளிக்கடைகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை. வா்த்தகா்கள் கோரிக்கையின் பேரில், சமூகஇடைவெளி, குறைந்த தொழிலாளா்களுடன் அனைவரும் முககவசம் அணியவும், குளிா்சாதன வசதியை இயக்கத்தடை விதித்தும் பிற்பகல் 2 மணிவரை ஜவுளிக்கடைகளைத் திறக்கலாம் என நிபந்தனைகளுடன் மேலூா் நகராட்சி அனுமதியளித்துள்ளதாக மேலூா் நகா் வா்த்தகா்கள் நலச்சங்கத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT