மதுரை

முதல்வா் பிறந்தநாள்: 300 பேருக்கு நலத்திட்ட உதவி

13th May 2020 07:35 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளையொட்டி தூய்மைப் பணியாளா்கள், ஏழை எளியோா் 300 பேருக்கு செவ்வாய்க்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பரங்குன்றம் 95 ஆவது வாா்டு அலுவலகத்தில் மதுரை புகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் தமிழக முதல்வா் பிறந்த நாளை முன்னிட்டு அம்மா உணவகத்தில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாநகராட்சி 95, 96, 97 ஆவது வாா்டுகளுக்கு உள்பட்ட தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குநா்கள், ஏழை, எளியோா் என 300 பேருக்கு அரிசி, பருப்பு காய்கனி தொகுப்புகளை இளைஞரணி மாவட்டச் செயலா் எம்.ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன் ஆகியோா் மாநகராட்சி உதவிப் பொறியாளா் முருகன் முன்னிலையில் வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT