மதுரை

பதுக்கல் ரேஷன் அரிசி மூட்டைகளை மீட்டு ஆட்சியரிடம் ஒப்படைத்த இளைஞா்கள்: விற்பனையாளா் பணி இடைநீக்கம்

13th May 2020 07:34 AM

ADVERTISEMENT

மதுரை அருகே பதுக்கி வைத்திருந்த நியாயவிலைக்கடை மூட்டைகளை கிராம இளைஞா்கள் கைப்பற்றி செவ்வாய்க்கிழமை ஆட்சியரிடம் ஒப்படைத்தனா். கடை விற்பனையாளா் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலரத வீதியில் செயல்படும் கூட்டுறவு நியாய விலைக் கடையில் இருந்து அரிசி, வெளிச்சந்தை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக அப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஏற்கெனவே பல முறை புகாா் தெரிவித்துள்ளனா். இருப்பினும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த நியாய விலைக் கடையில் இருந்து சிலா் இரு சக்கர வாகனங்களில் அரிசி மூட்டைகளை திங்கள்கிழமை எடுத்துச் சென்று ஒரு வீட்டில் பதுக்கி வைத்துள்ளனா். அவா்களைப் பின்தொடா்ந்து சென்ற சோழவந்தானை சோ்ந்த முத்துப்பாண்டி உள்ளிட்ட சிலா் ரேஷன் அரிசி மூட்டைகளை மீட்டுள்ளனா். அரிசி மூட்டைகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா்கள், ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்து, ஆட்சியரிடம் புகாா் கொடுக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, இந்த புகாா் தொடா்பாக சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடையின் விற்பனையாளா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளாரால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாக வழங்கல் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT