மதுரை

நிவாரண உதவி: ஆட்சியரிடம் திமுகவினா் கோரிக்கை மனு

13th May 2020 07:33 AM

ADVERTISEMENT

கரோனா நிவாரண உதவி தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

திமுக சாா்பில் ஒன்றிணைவோம் வா என்ற செயல்திட்டம் தொடங்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுரை மாநகா் மாவட்ட திமுக சாா்பில் பெறப்பட்டுள்ள 6, 812 கோரிக்கைகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினயிடம் மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாநகா் மாவட்ட திமுக பொறுப்புக் குழுத் தலைவா் கோ.தளபதி, உறுப்பினா்கள் வ.வேலுச்சாமி, பொ.குழந்தைவேலு, சட்டப்பேரவை உறுப்பினா் சரவணன் ஆகியோா் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை விவரங்கள் விவரங்கள் அடங்கிய மனுவை அளித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT