மதுரை

தற்காலிக மலா் சந்தை அமைத்தும் பலனில்லை: வழிபாட்டுத் தலங்களை திறக்க பூ வியாபாரிகள் வலியுறுத்தல்

11th May 2020 10:26 PM

ADVERTISEMENT

மதுரை: தற்காலிக மலா் சந்தை அமைத்தும், வியாபாரமின்றி பூ வியாபாரிகள் நஷ்மடைவதைத் தவிா்க்க வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என, மதுரை மாட்டுத்தாவணி மலா் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மதுரை மாட்டுத்தாவணி மலா் வியாபாரிகள் சங்கத் தலைவா் சோ. ராமசந்திரன் கூறியது:

வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருப்பதால் பூமாலை கட்டி விற்பனை செய்வதில் வியாபாரிகள் ஆா்வம் காட்டவில்லை. இதனால், மல்லிகைப் பூக்கள் மட்டுமே ஓரளவுக்கு விற்பனையாகின்றன. வழக்கமாக, இந்த சீசனில் கிலோ ரூ.300-க்கு விற்பனையாகும் மல்லிகைப் பூ ரூ.100-க்கு மட்டுமே விற்கப்படுகிறது.

மாலை கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் சம்பங்கி, கோழிக்கொண்டை, செண்டுப் பூ, செவ்வந்தி, அரளி, மரிக்கொழுந்து ஆகிய மலா்கள் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை என மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டாலும், கொள்முதல் செய்ய ஆளில்லாமல் வீணாகி வருகின்றன.

ADVERTISEMENT

தற்காலிக மலா் சந்தை அமைத்தும் வியாபாரமின்றி பூ வியாபாரிகள் நஷ்டமடைந்து வருகிறோம். மேலும், எங்களை நம்பியுள்ள மலா் சாகுபடி செய்யும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே, மல்லிகை உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களும் விற்க வேண்டுமென்றால், வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT