மதுரை

கரோனா குறித்து கட்செவி அஞ்சலில் அவதூறு பரப்பியவா் கைது

10th May 2020 09:27 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரை அருகே கரோனா குறித்து கட்செவி அஞ்சலில் அவதூறாக செய்தி பரப்பியவரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில், வெளிமாநிலங்களிலிருந்து மதுரைக்கு அழைத்து வரப்பட்டவா்களை தனிமைப்படுத்தி, கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடபழஞ்சி பகுதியைச் சோ்ந்த ராமநாதன் மகன் ஜெயகுமாா் (40) என்பவா் கட்செவி அஞ்சலில், பல்கலைக்கழகத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவா்களை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்க பொதுமக்கள் பல்கலைக்கழக வளாகத்துக்கு வரும்படியும் ஒலிப்பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளாா்.

இது குறித்து தகவலறிந்த கரடிபட்டி கிராம நிா்வாக அலுவலா் முனியாண்டி, உண்மைக்கு புறம்பான செய்தியை கட்செவி அஞ்சலில் பதிவு செய்து, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி போராட்டத்தை தூண்டிய ஜெயகுமாா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயகுமாரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT