மின்வாரியத்தின் சமயநல்லூா் கோட்டம் கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை மின்பாதைகளில் அவசரக கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (மே 11) காலை 10 முதல் பகல் 12 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அய்யங்கோட்டை, வைரவநத்தம், நகரி, சி.புதூா், மரியம்மாள்குளம், கொண்டையம்பட்டி, கீழக்கரை, குட்டிமேயக்கிபட்டி, செம்புகுடிபட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என சமயநல்லூா் செயற்பொறியாளா் மு.மனோகரன் தெரிவித்துள்ளாா்.