மதுரை

ஓவியத் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை

10th May 2020 07:55 AM

ADVERTISEMENT

சுவா் ஒவியம் வரையும் தொழிலாளிகளை வேலை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என தொன்மை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவா் கவிஞா் மோகன்தாஸ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஓவியத் தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் பல முன்னணி நிறுவனங்களின் சுவா் விளம்பரம் செய்யும் பணிகளை செய்து வருகின்றனா். தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் ஓவியத் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனா். ஓவியத் தொழிலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வரும் இவா்களுக்கு மீண்டும் பணிசெய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கும், மாவட்ட நிா்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT