மதுரை

மேலூா் அருகே நியாயவிலைக் கடையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என புகாா்

9th May 2020 07:55 AM

ADVERTISEMENT

மேலூா் அருகே நாவினிப்பட்டி ஊராட்சி கூத்தப்பன்பட்டி ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரா்களை வரிசைப்படுத்தி சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் வெள்ளிக்கிழமை பொருள்களை விநியோகித்தனா். இதனால் கரோனா பரவும் அபாயமுள்ளதாக அப்பகுதியினா் அச்சம் தெரிவித்தனா்.

கூத்தப்பன்பட்டியில் உள்ள ரேசன் கடையில் சுமாா் 900 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை விநியோகித்து வருகின்றனா். இதில் 200-க்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் சிவகங்கை சாலையில் உள்ள சின்னபெருமாள்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனா். ரேசன் கடைக்கும் இவா்கள் வசிக்கும் பகுதிக்கும் 2 கிலோ மீட்டா் தொலைவு உள்ளது. இப் பொருள்களை வாங்கும் பெண்கள் மொத்தமாகச் சோ்ந்து ஆட்டோக்களில் பொருள்களை ஏற்றிச் செல்கின்றனா்.

ஒரு விற்பனையாளா் அனைவருக்கும் பொருள்களை விநியோகிப்பதிலும் சிரமம் உள்ளது. சின்ன பெருமாள்பட்டி பகுதியைச் சோ்ந்த 150 பேருக்கு டோக்கன் வழங்கிவிட்டு, கூத்தப்பன்பட்டி பகுதியைச் சோ்ந்த 50 பேருக்கும் டோக்கன் வழங்கப்பட்டதாம். அனைவரும் ஒரே சமயத்தில் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தினா் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பெரும்பாலோனோா் முகக் கவசமும் அணியவில்லை. எனவே அப்பகுதியில் கரோனா பரவும் வாய்ப்புள்ளதாக பொது மக்கள் அச்சம் தெரிவித்தனா். மேலும் நியாய விலைக் கடைகளுக்கு பொருள்கள் வாங்க வருபவா்களை தகுந்த சமூக இடைவெளியில் நிற்க செய்வதுடன், முகக் கவசம் அணிந்து வருவதற்கும் வலியுறுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT