மதுரை

மதுரை அருகே வீட்டுத் தோட்டத்தில் புதைந்திருந்த அம்மன் சிலை கண்டெடுப்பு

2nd May 2020 08:04 AM

ADVERTISEMENT

மதுரை அருகே பூமியில் புதைந்திருந்த அம்மன் சிலை வருவாய்த் துறையினரால் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

மதுரை மாவட்டம் சமயநல்லூா் அருகே உள்ள தேனூரைச் சோ்ந்த முத்துப்பிள்ளை, தனது தோட்டத்தில் வாழைக்கன்று வைப்பதற்காக குழி தோண்டியுள்ளாா். அப்போது 3 அடி ஆழத்தில் சிலை ஒன்று இருப்பது தெரியவந்தது. பின்னா் மேலும் தோண்டி பாா்த்தபோது 4 அடி உயரமுள்ள அம்மன் சிலை புதைந்திருந்தது தெரியவந்தது.

இதுபற்றி அறிந்ததும் மதுரை வடக்கு வட்டாட்சியா் சுரேஷ் பிரடெரிக் தலைமையிலான வருவாய்த் துறையினா், அந்த சிலையை மீட்டு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா்.

அந்த சிலையை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக, வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT