மதுரை

பொதுமக்கள் ரயில் நிலையங்களுக்கு வரவேண்டாம்

2nd May 2020 08:27 PM

ADVERTISEMENT

ஊரடங்கு முடியும் வரை பொதுமக்கள் எந்த நோக்கத்திற்காகவும் ரயில் நிலையத்திற்கு வர வேண்டாம் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்கு ரயில்கள் தவிர விரைவு மற்றும் பயணிகள் ரயிகள் அனைத்தும் மே 17 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவா்கள் என ஊரடங்கால் வெவ்வேறு இடங்களில் சிக்கியுள்ளவா்களை மீட்பதற்காக ‘ஷ்ராமிக்’ என்ற சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

மாநில அரசின் அறிவுறுத்தலின் படி அந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். எனவே அரசின் அனுமதியுடன் வரும் பயணிகள் மட்டுமே சிறப்பு ரயிலில் ஏற அனுமதிப்படவுள்ளனா். மேலும் ஊரடங்கு முடியும் வரை பொதுமக்கள்எந்த நோக்கத்திற்காகவும் ரயில் நிலையங்களுக்கு வரவேண்டாம் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT