மதுரை

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அழிக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

2nd May 2020 08:03 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றகளின் சொத்து பாதுகாப்பு அறைகளில் உள்ள மதுபானங்களை அழிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் நீதித்துறை நடுவா் மன்றத்தின் சொத்து பாதுகாப்பு அறையில், போலீஸாா் பறிமுதல் செய்த மதுபானங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த மதுபானங்கள் திருடப்பட்ட சம்பவத்தில் 4 போ் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் நடராஜன், குற்றவியல் நீதிமன்றங்களின் சொத்து பாதுகாப்பு அறைகளில் இருக்கும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அழிப்பதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

இக் கடிதம் தொடா்பாக நீதிபதிகள் பி.என். பிரகாஷ், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோா் தாமாக முன்வந்து வெள்ளிக்கிழமை விசாரித்தனா். அதில், ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுவிற்கு அடிமையானவா்கள், மது கிடைக்காமல் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனா். இது தொடா்வதற்கான வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களின் சொத்து பாதுகாப்பு அறைகளில் இருக்கும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் அழிக்க வேண்டும்.

மதுபானம் அழிப்பு தொடா்பான வீடியோ, புகைப்படங்கள், நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவா்களின் சான்றுகள் விசாரணையின் போது சாட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT