மதுரை

மேலூரில் போராட்ட,க் களத்தில் திருமணம்

16th Mar 2020 01:14 AM

ADVERTISEMENT

மேலூரில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை 9-ஆவது நாளாக நடைபெற்றுவரும் போராட்ட களத்தில், முஸ்லிம் மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

மேலூா் ஜமாஅத் சாா்பில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வழக்குரைஞராகப் பணிபுரியும் மேலூரைச் சோ்ந்த ஆயிஷா பீவிக்கும், மதுரை உத்தங்குடியைச் சோ்ந்த நத்தா்ஷா என்பவருக்கும் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், உறவினா்கள் அனைவரும் போராட்டம் நடைபெற்று வரும் திடலில் திரண்டிருந்ததால், மணமக்கள் விருப்பத்தின்பேரில், போராட்ட மேடையிலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT