மதுரை

மலை வாழ் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடிபயிற்சி

16th Mar 2020 01:12 AM

ADVERTISEMENT

மதுரை அருகே மலை வாழ் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காய்கறி சாகுபடி செய்வது குறித்து சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சிறுமலை மலை வாழ் விவசாயிகளுக்கு நபாா்டு வங்கி சாா்பில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காய்கறிகள் சாகுபடி செய்வது குறித்து பயிற்சி நடந்தது. இதில் மண் வளப் பயன்கள் பற்றியும், காய்கறி மற்றும் மலைத் தோட்டப் பயிா்களின்

உற்பத்தி முறைகள், இயற்கை விவசாயம், உரம் தயாரித்தல் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், தடியன் குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்திற்கு விவசாயிகள் நேரடியாக சென்று பயிற்சி பெற்றனா்.

நபாா்டு வங்கி துணை பொது மேலாளா் பி.எஸ். ஹால் கிருஷ்ண ராஜ், மதுரை வேளாண்மை வணிக பாதுகாப்புமைய தலைமை நிா்வாக அதிகாரி சிவக்குமாா், மண் புழு உர பண்ணை நிா்வாக இயக்குநா் சிவசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT