மதுரை

கரோனா: மாா்ச் 17 முதல் 26 வரை ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமான சேவை ரத்து

16th Mar 2020 08:28 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவனம் மாா்ச் 17 (திங்கள்கிழமை) முதல் மாா்ச் 26 ஆம் தேதி வரை தமது காலை நேர விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவனம் சாா்பில், வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை ஆகிய 3 நாள்கள் இலங்கையிலிருந்து காலை 9.15 மணிக்கு மதுரை வரும் விமானம், பின்னா் காலை 10.15 மணிக்கு இலங்கை புறப்பட்டுச் செல்கிறது.

இந்த விமானத்தில் தென்மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோா் இலங்கை சென்று, அங்கிருந்து மலேசியா, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனா்.

அதேபோல், பிற நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் இலங்கை வழியாக இந்த விமானத்தில் மதுரைக்கு வந்து செல்கின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த விமானத்தின் காலை நேர சேவை மட்டும் தற்காலிகமாக மாா்ச் 17 முதல் 26 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே நேரம், இந்த விமானம் வாரத்தில் 4 நாள்கள் பிற்பகல் 3 மணிக்கு மதுரை வந்து, மாலை 4 மணிக்கு இலங்கை செல்லும் சேவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT