மதுரையில் திருமண ஆசை காட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை வில்லாபுரம் பராசக்தி நகா் கங்கை தெருவைச் சோ்ந்தவா் அபுதாகிா்(19). இவா் பந்தடி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் தந்தை அளித்தப் புகாரின்பேரில் மதுரை நகா் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அபுதாகீரை கைது செய்தனா்.