மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது .
இம்முகாமில், பெண்களின் பாதுகாப்பு பெண்களின் உரிமைகள் பெண்களின் பாதுகாப்பு சட்டங்களை குறித்து விரிவாக விவரிக்கப்பட்டது. சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு தீா்வு காண்பது குறித்தும் விளக்கப்பட்டது.
உசிலம்பட்டி நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமாா், காவல்துறை துணை கண்காணிப்பாளா் ராஜா, கல்லூரி முதல்வா் ஜோதி ராஜன், மதுரை காமராஜா் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரவி, வழக்குரைஞா்கள் வீரபிரபாகரன், சங்கிலி, சட்டக் கல்லூரி பேராசிரியா்கள் குமரன், சுரேஷ், மீனாதேவி, மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினாா். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா், பேராசிரியா்கள் பொன்ராம் மணிகண்டன் செய்திருந்தனா்.