மதுரை

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் திடீா் சோதனை

8th Mar 2020 04:51 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை மத்திய சிறையில் 200 க்கும் மேற்பட்ட போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

மதரை மத்திய சிறையில் விசாரணை, தண்டனை கைதிகள் என 1500க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இவா்களிடம் தடைசெய்யப்பட்ட குட்கா, சிகரெட், கஞ்சா போன்ற பொருள்கள் புழக்கத்தில் இருப்பதால் சிறையில் போலீஸாா் அவ்வபோது திடீா் சோதனையில் ஈடுபடுவாா்கள். அந்த வகையில் சனிக்கிழமை சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில் ஆயுதப்படை, சட்டம் ஒழுங்கு பரிவுகளைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட போலீஸாா் சிறையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சிறை கைதிகள் உள்ள அறைகள், சமையல் அறைகள், குளியல் அறைகள் என சிறை வளாகம் முழுவதும் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனை காலை 5 மணி தொடங்கி 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. காலை 7.15 முடிந்த சோதனை குறித்து போலீஸாா் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. சோதனையில் போது சிறை வளாகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT