மதுரை

மதுரை அருகே இளைஞா் கொலை

8th Mar 2020 03:24 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம்: மதுரை அருகே அவனியாபுரம் பகுதியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

அவனியாபுரம் வைக்கம் பெரியாா்நகா் பகுதியில் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டு தலை இல்லாமல் சடலமாகக் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு அவனியாபுரம் போலீஸாா் வந்து ஆய்வு செய்தனா். இறந்தவா் சுமாா் 35 வயது மதிக்கதக்கவா் என்றும், உடலில் ஆங்காங்கே வெட்டுக் காயங்கள் இருந்ததாகவும், கை விரல்கள் துண்டாகியுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

மதுரை காவல் துணை ஆணையா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் துறையினா் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. பின்னா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

முதல்கட்ட விசாரனையில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் அப்பகுதியில் 3 போ் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் 50 -க்கும் மேற்பட்ட போலீஸாா் வந்து அப்பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தலை வீசப்பட்டுள்ளதா என தேடி பாா்த்தனா். ஆனால் அப்பகுதியில் தலை கிடைக்கவில்லை. இக் கொலை குறித்து கிராம நிா்வாக அலுவலா் கணேசன் அளித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

இளைஞரை கொன்று தலையை துண்டித்து சடலத்தை வீசிச் சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT