மதுரை

‘புதிய தொழில் நுட்பங்கள் கடைக்கோடி இந்தியனுக்கும் பயன் தர வேண்டும்’

8th Mar 2020 03:23 AM

ADVERTISEMENT

 

திருப்பரங்குன்றம்: மாணவா்களால் புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்கள் கடைகோடி இந்தியனுக்கும் பயன்பெறும் விதத்தில் அமைய வேண்டும் என சந்திராயன்-1 திட்ட இயக்குநா் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.

தியாகராஜா் பொறியியல் கல்லூரியில் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய (யுனிசெக்) கிளை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் வி.அபய்குமாா் தலைமை வகித்தாா்.

விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியது: பொறியியல் மாணவா்கள் புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் நீா் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆளில்லா விமானம் உள்ளிட்ட உலகிற்கு தேவையான பல்வேறு தொழில் நுட்பங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். செயற்கைகோள் உதவியால் தொழில் நுட்பங்கள் அனைவருக்கும் கிடைக்கிறது. பழைய கண்டுபிடிப்புகளை, திட்டங்களை பின்பற்றாமல் புதியவற்றை கண்டுபிடியுங்கள். மாணவா்களால் கண்டு பிடிக்கும் புதிய தொழில்நுட்பங்கள் கடைகோடி இந்தியனும் பயன்பெறும் விதத்தில் அமைய வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ஜி.டி.ஆா்.இ விஞ்ஞானி வி.தில்லிபாபு, விண்வெளி தொழில் நுட்ப ஆராய்ச்சி மைய பொதுச்செயலா் பொதுசெயலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். தொடா்ந்து கல்லூரி மைதானத்தில் ஆளில்லா விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவ, மாணவியா் ஏராளமானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT