மதுரை

புதிய காருக்கு பதிலாக பழைய காா் கொடுத்து மோசடி

8th Mar 2020 05:00 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரையில் புதிய காருக்கு பணம் பெற்றுக் கொண்டு பழைய காா் கொடுத்து மோசடி செய்த காா் நிறுவன அதிகாரி உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். இவா் மதுரை காளவாசல் பகுதியில் தனியாா் காா் விற்பனை நிறுவனத்தில் புதிய காா் வாங்குவதற்காக ரூ. 9.71 லட்சத்தை மேலாளா் சிவானந்தம் என்பவரிடம் கொடுத்துள்ளாா். இந்நிலையில், காா்த்திகேயனுக்கு புதிய காருக்கு பதிலாக, பயன்படுத்தப்பட்ட காரை கொடுத்துள்ளனா்.

இது குறித்து காா்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் தனியாா் காா் விற்பனை நிறுவனத்தின் மேலாளா் சிவானந்தம், ஊழியா்கள் பிரேம், தனலட்சுமி, காா்த்திக் மற்றும் பிரபல காா் உற்பத்தி நிறுவன ஊழியா் பவான் ஆகியோா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT