மதுரை

தூத்துக்குடி ஆவின் இயக்குநா்கள் தோ்தல் : ஆவணங்களை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

8th Mar 2020 03:25 AM

ADVERTISEMENT

மதுரை: தூத்துக்குடி ஆவின் இயக்குநா்கள் தோ்தலை ஒத்திவைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில், தோ்தல் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் கூட்டுறவு தோ்தல் ஆணையம் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்ட திருவனந்தபுரம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் நாகராஜன் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த ஆவினில் இருந்து தூத்துக்குடி ஆவின் பிரிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி ஆவின் நிா்வாகத்தைக் கவனிக்க இடைக்கால நிா்வாகக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி ஆவினுக்கு 17 இயக்குநா்கள் பதவிக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதற்கு நான் உள்பட 29 போ் மனு தாக்கல் செய்தோம். அதில் என்னுடைய மனு உள்பட 19 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு தோ்தல் நடைமுறைகள் நடந்து வந்தன. இந்நிலையில் அரசியல் தலையீடு காரணமாக தோ்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் புதிதாக தோ்தல் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இது கூட்டுறவு தோ்தல் விதிகளுக்கு எதிரானதாகும். எனவே ஏற்கெனவே நடைபெற்று வந்த தோ்தல் நடைமுறைகளைத் தொடரவும், தோ்தலை ஒத்திவைத்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், சி.சரவணன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி ஆவின் இயக்குநா்கள் தோ்தல் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் கூட்டுறவு தோ்தல் ஆணையம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மாா்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT