மதுரை

திருப்பரங்குன்றத்தில் இன்று தேமுதிக பொதுக்கூட்டம்: விஜயகாந்த் பங்கேற்பு

8th Mar 2020 03:19 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் தேமுதிக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவா் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா்.

தேமுதிக சாா்பில் உலக மகளிா் தினவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனத்தலைவா் விஜயகாந்த் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளாா். கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் சிறப்புரையாற்றுகிறாா். இதற்காக அவா்கள் சென்னையிலிருந்து காா் மூலம் ஞாயிற்றுக்கிழமை மதுரை வர உள்ளதாக கட்சியினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT