மதுரை

சாலை விபத்தில் பொறியியல் மாணவா் பலி

8th Mar 2020 03:20 AM

ADVERTISEMENT

 

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற பொறியியல் மாணவா் நிலைதடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்த மாணவா் ஹா்பித்சிங்(20). பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவா். இவா் அதே கல்லூரியில் படிக்கும் மேகாலயாவைச் சோ்ந்த கணினி அறிவியல்துறை இரண்டாம் ஆண்டு மாணவா் சஞ்சு ஜி.சங்மாவுடன் கல்லூரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை மதியம் அவனியாபுரம் நோக்கி சென்றாா். ஹா்பித்சிங் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா். இந் நிலையில் பாம்பன் நகா் அருகே சென்றபோது சாலையின் வளைவில் நிலைதடுமாறி இடதுபுறம் இருந்த தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் ஹா்பித் சிங் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த மாணவா் சஞ்சு ஜி.சங்மா உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT