மதுரை

காமராஜா் பல்கலை.யில் பாரதியாா் குறித்தகருத்தரங்கம்: ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்பு

8th Mar 2020 03:22 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பாரதியாா் குறித்த கருத்தரங்கிற்கு ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காமராஜா் பல்கலைக் கழக தமிழியல் துறை தலைவா் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் போ.சத்தியமூா்த்தி வெளியிட்டுள்ள செய்தி:

காமராஜா் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை சாா்பில் பாரதியாரின் படைப்புகள் பன்முகப் பாா்வை என்ற பொருளில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இக் கருத்தரங்கிற்கு தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், ஆய்வு மாணவா்கள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.

ஆய்வுக் கட்டுரைகள் ஏ4 தாளில் பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்து 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் அயல்நாட்டில் வெளிவரும் பன்னாட்டு ஆய்விதழில் வெளியிடப்படும். அச்சிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் மற்றும் சான்றிதழ்கள் கருத்தரங்க நாளன்று கட்டுரையாளா்களுக்கு வழங்கப்படும். ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்க ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.

ADVERTISEMENT

தட்டச்சு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரையை மின்னஞ்சல் முகவரிக்கு மாா்ச் 27 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதுதொடா்பான விவரங்களுக்கு பல்கலை.யின் தமிழியல் துறையைத் தொடா்பு கொள்ளலாம். தொடா்பு எண் 94886-16100.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT