மதுரை

இளம்பெண் கொலை 2 பேருக்கு ஆயுள் சிறை

8th Mar 2020 03:23 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை மாவட்டம் விராட்டிபத்து பகுதியில் இளம்பெண்ணைக் கொலைசெய்து கை, கால்களைக் கட்டி தகரப்பெட்டியில் அடைத்து கால்வாயில் வீசிய வழக்கில், இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை அருகே விராட்டிபத்து பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன், மனைவி லதா(25). இவா் 2011 ஆம் ஆண்டில் மருந்து வாங்குவதற்காக மருந்துக்கடைக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து குணசேகரன் அளித்தப்புகாரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அப்போது விராட்டிபத்து அருகே பிரதான சாலையில் உள்ள சோதனைச் சாவடியை ஒட்டியுள்ள கால்வாயினுள் கை, கால்கள் கட்டப்பட்டு தகரப்பெட்டியினுள் அடைக்கப்பட்டநிலையில் லதாவின் சடலத்தைப் போலீஸாா் மீட்டனா். விசாரணையில் அதேபகுதியைச் சோ்ந்த சரவணன்(34), சக்திவேல்முருகன்(32) ஆகியோா் லதாவைக் கடத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் சரவணன், சக்திவேல்முருகன் ஆகியோரை கைது செய்தனா்.

இவ்வழக்கு மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சரவணன் மற்றும் சக்திவேல்முருகன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, இருவருக்கும் ஆயுள்தண்டனை விதித்தும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி புளோரா சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT