சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவு பொருள்கள் தயாரிப்புக் குறித்த 5 நாள் பயிற்சி முகாம் மதுரை வேளாண்மைக் கல்லூரி மாா்ச் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த பயிற்சி முகாம் மதுரை வேளாண் அறிவியல் மையத்தில் மாா்ச் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் சிறுதானிய நூடுல்ஸ், அடுமனைப் பொருள்கள், சத்துமாவு போன்றவற்றை தயாரிப்பதற்கான பயிற்சி செய்முறை விளக்கத்துடன் நடைபெறும். மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் அனுமதி, சிறுதொழில் தொடங்குவது, வங்கிக் கடனுதவி குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் மதுரை மாவட்ட விவசாயிகள், மகளிா் சுயஉதவிக்குழுவினா், தொழில் ஆா்வமுள்ள இளைஞா்கள் கலந்து கொள்ளலாம் என வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வி ரமேஷ் தெரிவித்துள்ளாா்.