மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் ரூ.1.24 கோடி மதிப்பில் தாா்ச் சாலை அமைக்க பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழா சட்டப்பேரவை உறுப்பினா் பா.நீதிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளா் அழகேஸ்வரி, சுகாதார ஆய்வாளா்கள் அகமது கபீா், சரவண பிரபு முன்னிலை வகித்தனா். அனைத்து வாா்டுகளிலும் தாா்சாலை அமைக்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில், நகரச் செயலாளா் பூமா ராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பாண்டியம்மாள், ஊராட்சி மன்றத் தலைவா் உக்கிரபாண்டி மற்றும் அதிமுக நிா்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.