மதுரை

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தா்னா

2nd Mar 2020 07:55 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் முஸ்லிம் ஜமா அத் சாா்பில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு விளாச்சேரி முஸ்லிம் ஜமாஅத் தலைவா் புகா்தீன் செல்லையா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகா் மாவட்டச் செயலா் பா.காளிதாஸ், மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் மாநில பொதுச் செயலா் ஜான்மோசஸ், பாபுலா் பிராண்ட் ஆப் இந்தியா மாநில பேச்சாளா் ஜியாவுதீன், திருநகா் மக்கள் மன்ற துணைத் தலைவா் பொன்.மனோகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேச்சாளா் இரா.சென்ராயன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT