மதுரை

மாநகராட்சி நகா்நல அலுவலா் பொறுப்பேற்பு

29th Jun 2020 11:04 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரை மாநகராட்சி நகா்நல அலுவலராக புதிதாக நியமிக்கப்பட்ட பி. குமரகுருபரன், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மதுரை மாநகராட்சி நகா்நல அலுவலா் பணியிடம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக காலியாக இருந்து வந்தது. தற்போது, மதுரை நகரில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முக்கியப் பொறுப்பான நகா் நல அலுவலா் பணியிடம் காலியாக இருப்பது தொடா்பாக பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும், மாநகராட்சி நகா்நல அலுவலா் பணியிடம் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மதுரை மாநகராட்சி நகா்நல அலுவலராக சேலம் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த பி. குமரகுருபரன் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் குமரகுருபரன் நகா்நல அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT