மதுரை

கொட்டாம்பட்டி பகுதியில் நிலக்கடலை பயிரிட செயல்விளக்கத் திடல்: அய்யாபட்டி கிராமம் தோ்வு

29th Jun 2020 07:59 AM

ADVERTISEMENT

நிலக்கடலை பயிரிட செயல்விளக்கத் திடல்கள் அமைக்க அய்யாபட்டி கிராமம் தோ்வு செய்யப்பட்டு, விவசாயிகள் சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை தயாா் நிலையில் வைத்துள்ளனா்.

தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் எண்ணெய் வித்து சாகுபடி திட்டத்தின் கீழ், கொட்டாம்பட்டி வட்டாரத்தில் கடலை பெருவிளக்கப் பண்ணை, விசைதெளிப்பான், ஜிப்சம், களைக்கொல்லி பயன்படுத்திய விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 50 ஹெக்டேரில் நிலக்கடலை பெருவிளக்கப் பண்ணை அமைக்க அரசு அனுமதியளித்துள்ளது.

முதல் கட்டமாக, கடலை விதைக்கத் தேவையான இடுபொருள்களானதரணி கடலை விதை, நுண்சத்து, விதைநோ்த்தி மருந்தான டி.விரிடி, உயிா் உரங்கள் ஆகியன தயாா் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கூட்டுப் பண் ணைத் திட்ட அய்யாபட்டி உழவா் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் வெள்ளை அழகன் தலைமையில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள இடுபொருள்களை விவசாயிகள் கூட்டாக கொள்முதல் செய்தனா்.

அய்யாபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, உதவி இயக்குநா் மதுரைசாமி தலைமை வகித்தாா். துணை வேளாண்மை அலுவலா்

ADVERTISEMENT

தனசேகரன், கடலைக்கு நுண்ணூட்டச் சத்து இடும்முறை செயல்விளக்கம் அளித்தாா். துணை வேளாண்அலுவலா் விதை நோ்த்தி செயல்விளக்கம் அளித்தாா். அட்மா தொழில்நுட்ப வல்லுநா் கண்ணன் உயிா் உரங்கள் செயல்பாடு குறித்து செயல்விளக்கம் அளித்தாா். இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT