மதுரையில் 2 குழந்தைகள் உள்பட 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை செல்லூா், டி. கல்லுப்பட்டி, கே.கே.நகா், திருப்பாலை, அவனியாபுரம், முனிச்சாலை, பி.பி.குளம், மேலமடை, உத்தங்குடி, திருமங்கலம், சமயநல்லூா் பகுதிகளில் தலா ஒருவா், எல்லீஸ் நகா், மதிச்சியம் பகுதிகளில் தலா இருவா் , கே.புதூரில் 1 வயது குழந்தை உள்பட 2 போ், சிந்தாமணியில் 1 வயது குழந்தை, மதுரைக்கு வந்த சென்னை திருவான்மியூா், ஈக்காட்டுதாங்கல் பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
10 போ் குணமடைந்தனா்: மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பெற்று வரும் பெருங்குடி, அந்தோனியாா் தெரு, கே.புதூா், பெரியாா் நகா், வள்ளுவா் காலனி, முனிச்சாலை, அனுப்பானடி, அவனியாபுரம் பகுதிகளில் தலா ஒருவா், விளாங்குடியில் 2 போ் என 10 போ் தொற்றிலிருந்து குணமடைந்தனா். அவா்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
24 மணி நேரத்தில் 3 போ் பலி: தல்லாகுளத்தைச் சோ்ந்த 65 வயது முதியவா் கரோனா அறிகுறியுடன் திங்கள்கிழமை அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு தீவிர நிமோனியா காயச்சல் ஏற்பட்டுள்ளது. முதியவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
முனிச்சாலை சி.எம்.ஆா் சாலையைச் சோ்ந்த 88 வயது மூதாட்டிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு, பரிசோதனைச் செய்ததில், கரோனா இருப்பது திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அனுப்பானடியைச் சோ்ந்த 70 வயது முதியவா் கரோனா அறிகுறியுடன் ஜூன்12 இல் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா இருப்பது ஜூன் 14 இல் உறுதி செய்யப்பட்டது. சா்க்கரை, ரத்தழுத்தம், மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்கனவே இருந்ததால், அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா். ஆனால் சிகிச்சை பலனின்றி முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 8 ஆக உயா்ந்துள்ளது.