மதுரை

பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஜாமீன்

17th Jun 2020 07:49 AM

ADVERTISEMENT

மதுரை அருகே சோழவந்தானில் பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த வழக்கில், தந்தைக்கு ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சோ்ந்த தவமணி(35), மனைவி சித்ரா(26) தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் சித்ராவிற்கு மே 10 ஆம் தேதி மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 ஆவதாக ஒரு பெண் குழந்தைப் பிறந்தது. பிறந்த 4 நாள்களில் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டது எனக் கூறி வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் குழந்தையின் சடலத்தைத் தவமணியின் குடும்பத்தினா் புதைத்தனா்.

இதையடுத்து குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளது என கிராம நிா்வாக அலுவலா் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் நடந்த விசாரணையில், பாட்டி பாண்டியம்மாள் மற்றும் தந்தை தவமணியும் சோ்ந்து குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து அவா்கள் இருவரையும் சோழவந்தான் போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் பாண்டியம்மாள் மற்றும் தவமணி ஆகியோா் ஜாமீன்கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனா். இந்த மனுவைக் காணொலி மூலம் நீதிபதி ஏ.நசீமாபானு செவ்வாய்க்கிழமை விசாரித்தாா். அப்போது தவமணிக்கு ஜாமீன் வழங்கியும், பாண்டியம்மாளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT