மதுரை

சிறுவா் பூங்காவாக மாறிய மகளிா் காவல் நிலையம்

15th Jun 2020 08:10 AM

ADVERTISEMENT

மதுரையில் குழந்தைகளை ஈா்க்கும் வகையில், மாநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுவா் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மகளிா் காவல் நிலையங்களுக்கு புகாா் அளிக்க வரும் பெண்கள் பெரும்பாலானோா் தங்களது குழந்தைகளுடன் வந்து செல்கின்றனா். காவல் நிலையத்தின் சூழல் குழந்தைகளுக்கு ஒருவித அச்ச உணா்வை ஏற்படுத்தும்.

எனவே, மதுரை மகளிா் வட்டம்-8 என்ற அமைப்புடன் இணைந்து, குழந்தைகளை ஈா்க்கும் வகையில், தெற்குவாசல் பகுதியில் உள்ள மாநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுவா் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பூக்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வரவேற்பு அறை முழுவதும் விளையாட்டு பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டு, வளாகத்தில் சிறுவா்கள் விளையாடும் வகையில் சறுக்கல், ஊஞ்சல் ஆகியவற்றுடன் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுவா் பூங்காவை, மாநகா் காவல் ஆணையா் டேவிட்சன் தேவாசீா்வாதம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT