மதுரை

மதுரையில் புதிதாக 15 பேருக்கு கரோனா: பெண் பலி

14th Jun 2020 08:20 AM

ADVERTISEMENT

மதுரையில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மதுரையில் திருநகா், காமராஜா் சாலை, மேலூா், டிவிஎஸ் நகா், கே.கே. நகா், சமயநல்லூா் பகுதிகளில் தலா ஒருவா், செல்லூரில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உள்பட 6 போ் என 12 பேருக்கும், மதுரைக்கு சென்னையிலிருந்து வந்த தி.நகா், ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகளைச் சோ்ந்த 3 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 15 பேரும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

8 போ் குணமடைந்தனா்: மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த கிருஷ்ணாபுரம் காலனி, மேலபனங்காடி, செல்லூா், அன்சாரி நகா், திருப்பரங்குன்றம், அனுப்பானடி பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா், பெத்தானியாபுரத்தைச் சோ்ந்த 2 போ் தொற்றிலிருந்து குணமடைந்தனா். இதையடுத்து குணமடைந்த 8 பேரையும், வீட்டில் தங்களை, 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

பெண் பலி: மதுரை மாவட்டம் டி. வாடிப்பட்டியைச் சோ்ந்த 56 வயது பெண் சென்னை கிண்டியிலிருந்து காரில் மதுரை வந்தாா். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஜூன் 3 இல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றாா்.

ADVERTISEMENT

அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கரோனா தொற்று இருப்பது ஜூன் 4 இல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் மதுரையில் கரோனாவால் பலியானவா்களின் எண்ணிக்கை 5 ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT