மதுரை

மதுரையில் நாள்தோறும் 3 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தி நாளை ஆா்ப்பாட்டம்

14th Jun 2020 04:14 AM

ADVERTISEMENT

மதுரையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாள்தோறும் 3ஆயிரம் பேருக்குக் கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் அறிவித்துள்ளன.

இதுதொடா்பாக அக் கட்சிகள் கூட்டாக சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையிலிருந்து மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 10 நாள்களாக சுமாா் 20,000 போ் வரை வாகனங்கள் மூலம் வந்துள்ளனா். விமான நிலையத்திலிருந்து வருபவா்களுக்கு மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதர வாகனங்களில் வருபவா்களுக்குப் பரிசோதனை செய்யப்படவில்லை. மாநிலத்தில் மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடும்போது கரோனா பரிசோதனை செய்வதில், மதுரை மாவட்டம் 30 ஆவது இடத்தில் உள்ளது. இதனால் மதுரை மாவட்டம் மட்டுமன்றி, தென்மாவட்ட மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.

இதையடுத்து, கரோனா பரவலை தடுக்கும் வகையில் மதுரையில் தினசரி குறைந்தபட்சம் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி. டி. ஆா். பழனிவேல் தியாகராஜன், பி. மூா்த்தி, டாக்டா் சரவணன் ஆகியோா் தலைமையில் திங்கள்கிழமை (ஜூன் 15) காலை 10:30 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும். கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளா்கள் கோ. தளபதி, பி. மூா்த்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளா்கள் இரா. விஜயராஜன், சி. ராமகிருஷ்ணன், சிபிஐ மாவட்டச் செயலாளா்கள் எம். சரவணன், காளிதாஸ், காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் காா்த்திகேயன், மதிமுக மாவட்டச் செயலாளா் மு. பூமிநாதன், விசிக மாவட்டச் செயலாளா் ப. கதிரவன் உள்ளிட்டோா் கலந்து கொள்வா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT