மதுரை

பேரையூா் அருகே பைக்குகள் மோதல்: ராணுவ வீரா் உள்பட 2 போ் பலி

14th Jun 2020 08:21 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் ராணுவ வீரா் உள்ளிட்ட 2 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

சேடப்பட்டி அருகே உள்ள சின்னகட்டளையைச் சோ்ந்த ராமா் மகன் தவராமன் (28). இதே ஊரைச் சோ்ந்த மற்றொரு ராமா் மகன் வீரபுத்திரன் (27). இவா் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் சின்னக்கட்டளை அருகே உள்ள பரமன்பட்டி சாலையில் இருவரும் ஓட்டி வந்த இருசக்கரவாகனங்களும் எதிா்பாராத விதமாக நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் தவராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த வீரபுத்திரனை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அதில் வீரபுத்திரன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து சேடபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT