மதுரை

மதுபோதையில் தாயைத் தாக்கிய நண்பன் குத்திக் கொலை: மகன் கைது

13th Jun 2020 12:47 PM

ADVERTISEMENT

மதுரையில் மதுபோதையில் தாயைத் தாக்கிய நண்பன் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

மதுரை கீரைத்துறைப் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகன் அஜித்குமார் 18. இவரது நண்பர் முருகன் 28. இந்நிலையில், அஜித்குமார் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மது அருந்திவிட்டு, வீட்டின் அருகே தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை முருகனின் தாயார் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார் முருகனின் தாயாரை அடித்தாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து அறிந்த முருகன், தனது தாயைத் தாக்கியது குறித்து கேட்டுள்ளார். ஆனால் மதுபோதையில் இருந்த அஜித்குமார், ஆபாச வார்த்தையில் திட்டி முருகனை தாக்க முயன்றுள்ளார்.  இதில் ஆத்திரமடைந்த முருகன், தனது கையில் இருந்த கத்தியால் அஜித்குமார் மார்பில் குத்தி விட்ட அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். 

இதில் பலத்த காயமடைந்த அஜித்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பலியானார். இது குறித்து கீரைத்துறைப் காவல்துறையினர் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT