மதுரை

திருப்பரங்குன்றம் அருகே வளையல் வியாபாரி கொலை 

11th Jun 2020 10:53 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் அருகே வளையல் வியாபாரியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

விளாச்சேரி மொட்டை மலையைச் சேர்ந்தவர் கருப்பையா (42). வளையல் வியாபாரி . இவர் புதன்கிழமை இரவு வீட்டின் வெளியே படுத்துக் கொண்டிருந்த போது நள்ளிரவில் மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். 

அதிகாலையில் எழுந்து அவரது மனைவி பொன்னம்மாள் பார்த்தபோது கருப்பையா உயிரிழந்தது தெரியவந்தது. இதை அடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கருப்பையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் அவரது மனைவி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரை விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

Tags : Thiruparankundram கொலை வளையல் வியாபாரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT