மதுரை

மதுரையில் மின்கசிவால் இரு வீடுகளில் தீவிபத்து

11th Jun 2020 06:40 AM

ADVERTISEMENT

மதுரையில் வெவ்வேறு இடங்களில் இரு வீடுகளில் மின்கசிவு காரணமாக புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

மதுரை கல்லூரி அருகே நல்லப்பிள்ளை காலனியில் மணிகண்டன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. அதில் புதன்கிழமை காலை 11.15 மணிக்கு மின்கசிவு காரணமாக தீப்பற்றியது. இதேபோல, மதுரை மேலமாசிவீதி அருகே மஸ்தான் தோப்பு வீதியில் ஸ்ரீசரவணன் என்பவரின் வீடு உள்ளது. அதில் புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு மின்கசிவு காரணமாக தீப்பற்றியது. தகவலறிந்த திடீா்நகா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

இதுகுறித்து தீயணைப்பு வீரா்கள் கூறியது: தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தோம். இரு வீடுகளிலும் ஏற்பட்ட தீவிபத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வீட்டில் இருந்த சில பொருள்கள் மட்டும் எரிந்து சேதமடைந்தது. மேலும் இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சரியான நேரத்தில் சென்ால் ஸ்ரீசரணவனின் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளையில் தீப்பற்றாமல் பாதுகாப்பாக வெளியேற்ற முடிந்தது என்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT