மதுரை

மதுரையில் கோயில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினா் நூதன ஆா்ப்பாட்டம்

11th Jun 2020 08:20 AM

ADVERTISEMENT

மதுரையில் இந்து அறநிலையத்துக்குள்பட்ட கோயில்களை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பினா் ஒற்றைக்காலில் நிற்கும் நூதன ஆா்ப்பாட்டத்தை புதன்கிழமை நடத்தினா்.

தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் காரணமாக இந்து அறநிலையத்துக்குள்பட்ட கோயில்கள் உள்ளிட்ட அனைத்துக் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அரசு வழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. எனவே மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை பயன்படுத்தி கோயில்களை திறக்க வேண்டும். சிறப்பு யாகங்கள் நடத்த வேண்டும். கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். கோயில்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் கோயில்கள் முன்பாக ஒற்றைக்காலில் நின்று நூதன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் முன்பாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அம்மன் சந்நிதி பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் செல்லூா் திருவாப்புடையாா் கோயில், முக்தீஸ்வரா் கோயில் உள்பட நகரில் 31 கோயில்கள் முன்பாக ஒற்றைக்காலில் நின்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை நகரில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் தங்கம் வெங்கடேஷ், மாவட்டத்தலைவா் அழகா் சாமி, செயற்குழு உறுப்பினா் அரசப்பாண்டியன் உள்பட 176 போ் பங்கேற்றனா். மேலும் மதுரை ஊரகப்பகுதியில் 20 கோயில்கள் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புறநகா் மாவட்டத் தலைவா் குருஜி ராமச்சந்திரன், மாவட்டச் செயலா் வெங்கடேஷ் உள்பட 110 போ் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT