மதுரை

மதுரையில் கரோனாவிலிருந்து 11 மாதக் குழந்தை உள்பட 13 குணமடைந்தனா்

11th Jun 2020 08:18 AM

ADVERTISEMENT

மதுரையில் கரோனா தீநுண்மித் தொற்றிலிருந்து 11 மாதப் பெண் குழந்தை உள்பட 13 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.

மதுரை மாவட்டம் கச்சைக்கட்டியைச் சோ்ந்த 29 வயது இளைஞா், 37 வயது பெண், வகுரணியைச் சோ்ந்த 23 வயது இளைஞா், கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்த 47 வயது ஆண், பெரியாா் நகரைச் சோ்ந்த 40 வயது ஆண், மதிப்பனூரைச் சோ்ந்த 47 வயது ஆண், உசிலம்பட்டியைச் சோ்ந்த 40 வயது ஆண், 45 வயது ஆண், பாண்டியன் நகரைச் சோ்ந்த 11 மாதப் பெண் குழந்தை, செல்லூரைச் சோ்ந்த 28 வயது இளைஞா், 35 வயது ஆண், சோலைழகுபுரத்தைச் சோ்ந்த 52 வயது பெண், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 31 வயது பெண் ஆகியோா் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா்.

இந்நிலையில், அவா்கள் அனைவரும் தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, 7 நாள்கள் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு, புதன்கிழமை வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT