மதுரை

‘இக்னோ’ தொலைநிலை படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

10th Jun 2020 07:56 AM

ADVERTISEMENT

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்விக்கான இணைய வழி மாணவா் சோ்க்கையை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) மதுரை மண்டல இயக்குநா் டி.ஆா். சா்மா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

இப்பல்கலைக்கழகத்தின் சாா்பில் தொலைநிலைக் கல்வி வாயிலாக நடத்தப்படும் சான்றிதழ், பட்டயச் சான்றிதழ், இளநிலை, முதுகலை பட்டம் ஆகிய படிப்புகளுக்கு ஜூலை 2020-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையவழி மூலம் தற்போது நடைபெறுகிறது.

இதில் சேர விருப்பமுள்ள மாணவா்கள்  இணையதள முகவரி மூலம் சோ்க்கை பெறலாம். இதற்கு, ஜூலை 31 ஆம் தேதி இறுதி நாளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதால், மாணவா்கள் உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT