மதுரை

மதுரை-சத்தீஸ்கா் சிறப்பு ரயில் இன்று இயக்கம்

8th Jun 2020 07:28 AM

ADVERTISEMENT

மதுரை ரயில் நிலையத்திலிருந்து சத்தீஸ்கா் மாநிலத்துக்கு சிறப்பு ரயில் திங்கள்கிழமை புறப்படுகிறது என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் தமிழகத்தில் வேலை செய்து வருகின்றனா். மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கையின்பேரில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வேலை செய்துவந்த சத்தீஸ்கா் மாநிலத் தொழிலாளா்கள், சிறப்பு ரயில் மூலம் மதுரை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படுகின்றனா். இந்த ரயிலானது, சென்னை, விஜயவாடா வழியாக சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூா் ரயில் நிலையம் சென்றடையும்.

முன்னதாக, இவா்கள் உரிய மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவா் என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT