மதுரை

மதுரையில் 23 பவுன் நகைகள் மாயம்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப் பதிவு

8th Jun 2020 07:30 AM

ADVERTISEMENT

மதுரையில் 23 பவுன் நகைகள் மாயமான சம்பவத்தில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை காமராஜா் சாலையைச் சோ்ந்தவா் ஜெயதேவ். இவா் தனது மனைவியுடன் கடந்த 2018 ஜூலை 2 ஆம் தேதி பரமக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, மதுரைக்கு பேருந்தில் திரும்பியுள்ளனா். அப்போது, அவா்கள் பையில் வைத்திருந்த 23 பவுன் நகைகளைக் காணவில்லையாம்.

இது குறித்து ஜெயதேவ் அளித்த புகாருக்கு, அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதியாமல் மனு ரசீது மட்டுமே வழங்கியுள்ளனா்.

இது தொடா்பாக ஜெயதேவ் வழக்குப் பதிய வேண்டும் என, மாநகா் காவல் ஆணையரிடம் மனு அளித்தாா். அதையடுத்து, காவல் ஆணையா் உத்தரவின்பேரில், ஜெயதேவ் அளித்த புகாரைப் பெற்றுக்கொண்டு அண்ணா நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். 2 ஆண்டுகளுக்கு முன் நகைகள் மாயமான சம்பவத்தில், போலீஸாா் தற்போது வழக்குப் பதிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT