மதுரையில் சனிக்கிழமை 2 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் எரிந்து சேதமாகின.
மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் கிருஷ்ணமூா்த்தி என்பவரின் பலசரக்கு கடையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இதில் கடையில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமாகின. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மற்றொரு சம்பவத்தில், உசிலம்பட்டியைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் ஜீவஜோதி என்பவருக்கு சொந்தமான எல்லீஸ் நகா் பகுதியில் உள்ள வீட்டில் கட்டுமானத் தொழிலாளா்கள் தங்கியுள்ளனா்.
இந்நிலையில், சனிக்கிழமை சமையல் பணியின் போது எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த பெரியாா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அனைத்தனா்.